Tuesday, June 22, 2010

செம்மொழியான தமிழ் மொழியாம் !!!

வணக்கம் . என் முதல் தமிழ் வலைப்பதிவு தமிழ் செம்மொழி மாநாடு பற்றியதாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். தமிழில் உருப்படியா ஒரு வாக்கியம் எழுதி ஆறு வருடங்கள் ஆகுது . அதனால சின்ன சின்ன தப்பு இருந்தா மன்னிக்கவும். முதல் தமிழ் செம்மொழி மாநாடு இன்று கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாம் கோவையில் சிறப்பாக துவங்கி இருக்கும் . 21 ஆம் நூற்றாண்டில் தமிழை விட வேற எந்த மொழிக்கும் இந்த பெருமை கிடைக்காது . இவ்வளவு செலவு பண்ணி இப்படி ஒரு விழா நம் தாய் மொழிக்கு தேவையா என்பது பத்தி நான் எழுத போவது இல்ல. ஏன்னா தமிழ் மொழியை விட வேற எந்த மொழியும் இத்தகைய பெருமைக்கு ஆளாக முடியாது .

தமிழ் மொழிக்கு இணையாக வடமொழி சமஸ்கிருதம் இருந்தது. ஆனால் இன்றோ அது வழக்கழிந்து போய்விட்டது . அந்த நிலை நம் தமிழ் மொழியை நெருங்கி கொண்டு வருகிறதோ என்கிற கவலை எனக்கு மட்டும் இல்லை ,பலருக்கும் உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ் மொழியின் அருமை பெருமைகளை சொல்ல வேண்டியது இல்லை. ஆனால் இன்றோ நாம் பேசும் ஒவ்வொரு தமிழ் சொல்லிற்கும் இணையாக ஒரு ஆங்கில சொல் சேர்த்துக்கொள்கிறோம் . மாற்றம் என்பது இயற்கையின் நியதி . மொழி வழக்கு மாறுவது ஒன்றும் புதிதான செய்தி அல்ல. மாறாக அந்த மற்றம் மொழியின் முன்னேற்ற பாதையில் உள்ளதா என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்தி.

தமிழ் மொழியின் இன்றைய நிலை என்ன மொழியின் வளர்ச்சிக்காக நாம் செய்ய போவது என்னென்ன ? குழந்தை தன் பெற்றோரை அம்மா அப்பா என்றழைத்த காலமெல்லாம் முடிந்து விட்டது . குடும்பத்திற்குள்ளேயே ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளும் காலம் இது. பள்ளி செல்லும் சிறுவர்கள் மிகவும் வெறுக்கும் பாடம் தமிழ் தான் . காரணம் இன்று உள்ள பாடப்பகுதிகள் பல மாணவர்களுக்கு தமிழ் மேல் ஆர்வத்தை கொண்டு வருவதற்கு பதிலாக அச்சத்தை உண்டாக்குகிறது . பதினெட்டு வயது வரையிலும் தமிழை படித்தும் எழுதியும் பழகினாலும் பிழை இன்றி பலரால் எழுத முடியவில்லை. நம் தாய் மொழியில் வெளிவரும் கவிதைகள் , கட்டுரைகள் , நாளுக்கு நாள் குறைந்து கொண்டும் , தரம் தாழ்ந்து கொண்டும் செல்கின்றன. பள்ளியில் இரண்டடி திருக்குறளை படிக்க கஷ்டமாய் உள்ளது. திருக்குறள் உணர்த்தும் நன்னெறியை தெரிந்து கொள்ள விழையாமல் , இரண்டு மதிப்பெண் பெறுவதற்காக விருப்பமின்றி மனப்பாடம் செய்யும் நிலையே இன்று பரவலாக உள்ளது. அதை கூட choice ல் விட்டு விடவே பலர் நினைக்கிறோம் .


இப்படி மொழி மேல் ஆர்வமே இல்லாத நம்மால் , நாளை எவ்வாறு தமிழை பேணிக்காக்க முடியும் ? என் அப்பா எனக்கு சொல்லிக்குடுத்ததில் பாதியாவது என்னால் என் மக்களுக்கு சொல்லி தர முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. நான் என் அம்மாவிடம் தமிழில் பேசுவது போல என் பிள்ளையால் பேச முடியுமா என்றும் தெரியவில்லை. ஆனால் இவை அனைத்தும் நாம் மொழியை பாதுகாக்கும் முறையில் தான் உள்ளது. தமிழ் சான்றோர்கள் போல கவிதை , கதை எழுத முடியவில்லை என்றாலும் , நம்மால் முடிந்த அளவில் தமிழில் பேசுவது, நாளிதழ்கள் வாங்கி படிப்பது , பிள்ளைகளுக்கு சொல்லி தருவது போன்ற விதத்திலாவது தமிழை வாழ வைப்போமே !


நாலாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நம் தமிழ் மொழியின் சிறப்புகளை பற்றி புகழ் பாடும் இடமாக மட்டும் இந்த மாநாடு இல்லாமல் , அது அழிந்து விடாமல் இருக்க மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் பற்றியதாகவும் இருக்கும் என நான் . 380 கோடி ரூபாயும் தமிழ் மொழிக்கு செய்யும் செலவாக கருதாமல் , அதை காக்க நாம் செய்யும் முதலீடாக எண்ணுவோம் . அரசியல் உள்நோக்கம் இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை , எனினும் தமிழை காக்க கலைஞர் மேற்கொண்டுள்ள இந்த ஏற்பாட்டினை பாராட்டுகிறேன். எதோ , என்னால் முடிந்த அளவு , ஒரு வலைப்பதிவு எழுதி இருக்கிறேன் . மறந்த தமிழை ஞாபகப்படுத்திய செம்மொழி மாநாட்டுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே , இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே"

7 comments:

  1. jus would like to quote a forward msg tat i got sterday night..

    "Ulaga tamil sem-mozhi manadu yedharkku..? Ela tamil'argal alindhadharka.. illai.. Atharku thunai yaga iruntha congressai ariyanai etriatharka, Inam alindha pinbu mozhi yedharkku...!

    Than inam alindhadhai thaanae kondadum orey inam nam TAMIL inam thaan..!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. The timing of the conference is very unfortunate. But Tamil deserves the conference and lets hope we do not forget the injustice and hope that the remaining brothers in eelam get a peaceful self-righteous life.

    ReplyDelete
  4. Kalaignar wanted the conference to be held in his government and has succeeded in it. Leave behind the political reasons. Its really great to have a function for our language. No Language deserves such a special moment except us. Lets be happy for that.

    ReplyDelete
  5. /நான் என் அம்மாவிடம் தமிழில் பேசுவது போல என் பிள்ளையால் பேச முடியுமா என்றும் தெரியவில்லை/

    Pesanum, pesuvaanga.. vitruvoma illattina?? :-)
    idhu varaikkum padicha un posts la idha padikkum podhu oru different feeling.. adhaan "thamizh"..

    /தமிழ் மொழியின் இன்றைய நிலை என்ன மொழியின் வளர்ச்சிக்காக நாம் செய்ய போவது என்னென்ன/

    valarchikku edhavadhu panramo illayo azhikka edhayum pannaama irukkanum.. adhuvey inraya soozhinailaila thamizh thondudhaan..

    Naanum idhey vishayatha pathi ezhudhanum nu ninaichuttu irundhen.. konjam velai adhigamaayiduchu.. you have chosen the right topic at the right time with right perspective..

    "Indha maanadu nadathapadum neram vendumaanaal arasiyalai saarndhu irukkalaam.. aanal nokkathai kurai solla koodadhu..

    kalaignar pala paarattu vizhakkala thanakkey nadathirukkaru.. mudhal muraiya uruppadiyaa oru vizha... "thagudhiyaana thamizhukku.."

    ReplyDelete
  6. uyir ulla uyiruku(not jus the Ela tamil'argal) uyir tharuvathai vitu vitu, uyir atra uyiraana tamiluku uyir tharuvathu mukiyama!!!!

    ReplyDelete
  7. " காதிலே பூந்தோட்டத்தையே சொருவினாலும்"............!!!
    // தென்னிந்திய நடிகர் சங்கம், விரைவில் இந்திய நடிகர் சங்கம் என்று மாற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் //
    "அகில உலக நடிகர் சங்கம் என பெயர் வைத்தலே கணியன் பூங்குன்றனாரின் தமிழர் சிறப்பை உலக அளவில் கொண்டு எட்டுத் திக்கும் தமிழரின் புகழ் பரவிட ஏதுவாக இருக்கும். "வாழ்க உலக நாயகனின் மொழிப்பற்று." மன்னிக்கவும் நாட்டுப் பற்று / உலகப்பற்று. "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" " ஹிஹும் ஹிஹும் " இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் /ஏமாறுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே"
    " காதுலேயே பூந்தோட்டத்தையே சொருவினாலும்"..............!!!
    கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,முன் தோன்றி மூத்த குடியல்லவா???..........
    "யாருக்காக இது யாருக்காக" - பாடல்; டி எம் சௌந்தரராஜன்- பாடகர்; கண்ணதாசன் -வரிகள்; எம் எஸ் விஸ்வநாதன்-இசை ; வசந்த மாளிகை -திரைப்படம்; ... பாடி ஆறுதல் அடைபவன் - செந்தமிழுக்கு சொந்தக்காரன்; / மன்னிக்கவும் "பாமரத் தமிழன்".

    ReplyDelete